காஞ்சீபுரம் மாவட்டம், போரூர், காரப்பாக்கம் மோத்தி நகர் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயானது மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த கால்வாய், சாலை அருகே உள்ளதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திறந்த நிலையில் இருக்கும் கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.