காஞ்சீபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் பெரிய கொளத்துவாஞ்சேரி குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.