காஞ்சீபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் ஆயில்மில் ரோடு அருகே உள்ள மின் கம்பம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது . எப்போது கீழே விழுமோ? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய மின் கம்பம் அமைத்துதர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.