காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், மாத்தூர் பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இந்த இடம் மிகுந்த அசுத்தமாக மாறிவருகிறது. எனவே இந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். இங்கு குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகை வைத்தால் இந்த இடம் அசுத்த நிலையில் இருந்து மீட்கப்படும்.