காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஆதனூர் மெயின் ரோடு சாலையில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பஸ் நிறுத்ததில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் வாடுவதும் மழையில் நனைவதுமான சூழல் உள்ளது. பயணிகளின் சிரமத்தை உணர்ந்து சேதமடைந்த இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டுமென்று என்று சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுக்கிறோம்.