சாலை சீரமைக்கப்பட வேண்டும்

Update: 2023-01-19 07:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் பாங்க் ஆப் பரோடா வங்கி எதிரே பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இப்பணி முடிவடைந்த நிலையில் மீண்டும் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாறு நிலை உள்ளது. அவ்வப்போது சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்