சென்னை திருமங்கலம் திருவல்லீஸ்வரர்நகர் வெற்றிவிநாயகர் கோவில் தெருவில் ஒரு தனியார் பள்ளி முன்பு டீக்கடையும், பெட்டிக்கடையும் உள்ளது. இந்த கடைகளில் சிகரெட் உள்ளிட்டவற்றை வாங்கி பலர் பள்ளி வாசலிலேயே புகைபிடித்து கொண்டிருக்கிறார்கள். இதனை யாருமே இதுவரை கண்டித்ததாக தெரியவில்லை. போலீசாரும் கண்டும் காணாதது போல செல்கிறார்கள். சிகரெட் புகையால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இந்த போக்கு தவிர்க்கப்படுமா? பள்ளி முன்பு எச்சரிக்கை போர்டு வைக்கப்படுமா?