மயிலாடுதுறை சாலையில் அவ்வப்போது அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மீது உரசி தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கயிறுகள் மூலம் கட்டப்பட்டு இருந்தாலும் மூட்டைகள் கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. ஆகவே போக்குவரத்து அதிகாரிகள் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை