சென்னை, பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மாழைநீர் கால்வாயானது மேல் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு திறந்திருக்கும் கால்வாய்க்கு மூடி அமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.