மோசமான சாலை

Update: 2023-01-11 12:33 GMT

சென்னை காட்டுப்பாக்கம் ராயல் கார்டன் பகுதியில் அம்மா பூங்காவுக்கு அருகே உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. மேலும் அதை ஒட்டி செல்லும் கிளைச் சாலைகள் அனைத்தும் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சேதம் அடைந்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்களை அச்சுறுத்தும் நிலையில் சாலை உள்ளது. மேலும் சாலையில் மிதமான வேகத்தில் சென்றாலும் கூட விபத்து ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்னவோ!

மேலும் செய்திகள்