சென்னை, வேளச்சேரி பஸ் நிறுத்ததில் ஆபத்தான வகையில் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் பயணிகள் தவறி கீழே விழுந்து விடுகிறார்கள். சில சமயங்களில் பெரிய விபத்துகளும் ஏற்படுவதால் பொதுமக்கள் அந்த இடத்தில் இறங்கும்போது மிகுந்த கவனத்தோடு இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?