செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் பகுதியிலுள்ள செட்டிப்புண்ணியம் ஊருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.