காஞ்சீபுரம் மாவட்டம் திரிசூலம் பெரியார் நகர் 3-வது குறுக்கு தெருவில் இரும்பு மின் கம்பம் உள்ளது. இதன் அருகே குழந்தைகள் விளையாடும் பகுதி இருப்பதால் மின்கசிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே இரும்பு மின்கம்பத்தை அகற்றி, சிமெண்ட் மின் கம்பம் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கீழே போடப்பட்டுள்ள சிமெண்ட் மின் கம்பத்தை அந்த இடத்தில் வைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.