காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி மற்றும் தாம்பரத்திற்கு செல்லும் பஸ்கள் மெட்ரோ ரெயில் பணி நடப்பதால் சரியான நேரத்தில் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் பொதுமக்களும் காலதாமதமாக சென்று வரும் சுழல் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.