காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியில் உள்ள அய்யப்பன்தாங்கள் சுப்ரமணிய நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியே குப்பை கிடங்காக காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் சாலைகளில் அதிக அளவில் கொட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல இடையூறாக உள்ளது. எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?