காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலிருந்து பிராட்வே செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் 3 பஸ்கள் மாறி(குமணன் சாவடி வரை ஒரு பஸ், குமணன்சாவடியிலிருந்து கோயம்பேடு வரை ஒரு பஸ், கோயம்பேட்டிலிருந்து பிராட்வே செல்ல ஒரு பஸ்) செல்லும் சூழல் அமைகிறது. எனவே மாங்காட்டிலிருந்து பிராட்வே செல்ல நேரடி பஸ் சேவை வேண்டும்.