காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் பகுதியிலிருந்து போரூர் செல்லும் சாலை ஆபத்து நிறைந்த சாலையாக உள்ளது. வளைவு பகுதியில் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் பள்ளி அருகே இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சாலையை கடந்து செல்லும் அச்சப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?