காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலை கரையான் சாவடி, மாங்காடு வழியாக சென்று வருகிறது. இந்த நிலையில் குமணன் சாவடியிலிருந்து மாங்காடு செல்லும் சாலையை( விநாயகர் கோவில் அருகே) சமீபத்தில் தான் சீர் செய்துள்ளனர். ஆனால் சாலையில் வேகத்தடை இல்லாததால் இரவு நேரத்தில் அந்த சாலையில் உள்ள வளைவு பகுதியில் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. எனவே மேற்கூறிய சாலையில் வேகத்தடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.