திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாடன் சிட்டி 8-வது தெருவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு மேல்தள மூடி மூடப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் கலந்தும் குப்பைகள் கொட்டப்பட்டும் வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று ஏற்படும் முன்பு கால்வாயை மூடுவதற்கு சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.