திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பாலாஜி நகரில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.