காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பஸ் நிறுத்தம் எதிரே இருக்கும் இடம் குப்பைகள் நிறைந்தும், சுகாதரமற்ற நிலையிலும் இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்படாமலே இருப்பதால் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி, கழிவுநீராக மாறிவிட்டது. அந்த கழிவுநீரில் தான் கால்நடைகள் உலா வருகின்றன. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.