திருவள்ளூர் மாவட்டம், ஆவடி புதுபேட்டை சபி நகர் 3-வது தெருவில் சில நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் இரவு நேரங்களில் நடந்து செல்லும் போது சமூகவிரோத செயல்கள் ஏற்படுமோ என்று அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.