காஞ்சீபுரம் மாவட்டம் பட்டூரில் இருந்து மாங்காடு வழியே 26பி, 54பி, 566பி, 53பி தடம் எண் கொண்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்கள் வந்து செல்வதற்காக பட்டூர் பள்ளிவாசல் அருகே பஸ் நிறுத்தம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிறுத்தத்தை ஆட்டோக்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பஸ்கள் வந்து செல்ல இடையூறாக உள்ளது. மேலும் பட்டூர் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சரிவர இயங்குவதில்லை. தீர்வு கிடைக்குமா?