திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பஜார் வீதி கண்ணதாசன் நகரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வீட்டு கழிவுநீர் தெருக்களில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலை வசதி இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர். எனவே சம்பத்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.