சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 5-வது தெரு நுழைவு வாயில் அருகே பழுதடைந்த மின்கம்பங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்து சம்பவங்களும் நிகழ்கிறது. பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்லக்கூட கடும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் மின்கம்பங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.