செடி கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-04 14:58 GMT

சென்னை கேகே நகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள உடற்பயிற்சி பிரிவில் தங்கி ஏராளமான நோயாளிகள் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் படர்ந்து இருப்பதால் கொசுக்கள் தொல்லை அதிகம் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கமின்றி மக்கள் தவிக்கிறார்கள். மேலும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அவலமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்