காஞ்சீபுரம் மாவட்டம் குமணன்சாவடியிலிருந்து வேலப்பன்சாவடி செல்லும் சாலை சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக வேலப்பன் சாவடி அருகே இருக்கும் சாலை பகுதி குண்டும் குழியுமாக இருப்பதுடன், விபத்து ஏற்படும் பகுதியாகவும் மாறி வருகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீர் செய்ய சம்பந்தபட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.