சென்னை மணலி விமாலாபுரம் 2-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த 2 மாதமாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் தொற்று பரவும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் கால்வாயை மூட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.