திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காடு சாலை திருப்பாலைவனம் பஜார் விதியில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியே இருளில் மூழ்கிவிடுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட சிரமப்படுகின்றனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடக்க இது வழி வகுக்கிறது. எனவே மின் விளக்குகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.