திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட பூங்கா 6 மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பூங்காவை திறந்தால் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பூங்காவை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.