சென்னை கொளத்தூர் பெரியார் நகர் பூங்காவில் மின்விளக்கு எரியாமலும், குப்பைகள் அகற்றப்படாமலும் இருக்கிறது. இரவு நேரங்களில் பூங்கா இருள் சூழ்ந்து காணப்படுவதால் நடைபயிற்சி செய்ய வரும் மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.