செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம், ஆத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை(திண்டிவனம்-சென்னை மார்க்கம்) உள்ள நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. குறிப்பாக சுங்கச்சாவடி அருகே உள்ள இடத்தில் அதிகமான பள்ளங்கள் உள்ளன. இதனால் நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சீர் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.