காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள கொழுமணிவாக்கம் பகுதியில் ஒரு பஸ் நிறுத்தம் உள்ளது. பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை சேதமடைந்து மிக மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நலன் கருதி இந்த பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைத்து தர சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.