காஞ்சீபுரத்திலிருந்து கலவை வழியாக ஆரணி செல்லும் பஸ் (தடம் எண்: 135) திங்கட்கிழமை மற்றும் விஷேச தினங்களில் வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாண, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பஸ் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மேற்கூறிய பகுதிகளுக்கு தினசரி பஸ் சேவை வழங்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.