சென்னை பரணிபுத்தூர் மணதங்கால் கால்வாயில் கழிவுநீர் கலக்கபடுகிறது. இது செம்பரபாக்கம் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயாக இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இதில் தினமும் கழிவுநீர் கலக்கப்படுவதால் மக்கள் நீரை உபயோகப்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் தாகம் தீர்க்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.