காஞ்சீபுரத்திலிருந்து ஏனாத்தூர் செல்லும் சாலையில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு கூடம் அருகே உள்ள சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் சாலையின் வளைவுப் பாதையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க சமந்தப்பட்ட துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.