அத்தாணி கருள்வாடிபுதூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் முன்பு உள்ள மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. வேகமாக காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எலும்புக்கூடாக காட்சிள அளிக்கும் அந்த மின் கம்பத்தை மாற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.