திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த தண்டூரை பகுதியில் உள்ள குடிநீர் ஏற்றும்குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. மேலும் தண்ணீர் வழிந்து சாலை சேரும் சகதியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ,முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட சிரமப்படுகின்றனர். வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?