புதிய நூலகக் கட்டிடம் வேண்டும்

Update: 2022-12-25 14:46 GMT

பள்ளிக்கரணை செட்டிநாடு என்கிளேவ் அருகே அரசு நூலகம் ஒன்று உள்ளது. நூலகம் மிக சிறிய அளவில் சாலையை விட தாழ்வான பகுதியில் இருக்கிறது. மழைக்காலங்களில் நூலகத்துக்குள் நீர் புகுந்துவிடுவதால், அங்கு உள்ள புத்தகங்கள் நீரில் நனைந்து வீணாகிறது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நூலகத்டை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி புதிய நூலக கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வழி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்