செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை, அகரம்தென் பகுதியில் உள்ள கஸ்பாபுரம் குறிஞ்சி தெருவில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழை காலத்தில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.