காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர், ஆதனூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கல் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.