காஞ்சீபுரம் மாவட்டம் குமணன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் கடந்த 3 மாதங்களாகவே குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நீண்ட நாட்களாக தொடரும் இந்த பிரச்சினையால் அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.