மோசமான சாலை

Update: 2022-12-21 14:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பதட்டூர் பேட்டை சாலை மிக மோசமாக இருக்கிறது. மேடு பள்ளங்கள் நிறைந்துள்ள சாலையில் பயணிக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்