திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சண்முகபுரம் தெருவில் மழைநீர் வடி கால்வாய் பணிக்காக தொண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் மக்கள் பள்ளம் தெரியாமல் அதில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?