திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் முத்தமிழ் நகர் ராஜ சிம்மன் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் நீண்ட நாட்களாக பராமரிக்கபடாமலே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மின் கம்பம் சரிந்து விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு மின் கம்பத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.