திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வெள்ளனுர் கிராமம் ஸ்ரீ பாரதி நகர் மெயின் ரோடு சந்திப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடக் கடினமான சுழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.