சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா சாலையில் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் அந்த பள்ளம் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?