திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வடகரை கிராமம் பஜனை கோவில் தெரு அருகே உள்ள ஒரு கோவில் குளம் கடந்த 50 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சிதைந்து காணப்படுகிறது. குளம் முழுவதும் புதர் மண்டி தூர்வாரப்படாமல் இருக்கிறது. மேலும் குளம் அருகே டிரான்ஸ்பார்மர் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் ஆபத்து ஏதும் ஏற்படுமோ என அச்சப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?