திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெரிய ஓபுளாபுரம் ஈச்சங்காடுமேடு பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட சிரமப்படுகின்றனர். எனவே அங்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?