காஞ்சீபுரம் நன்மங்கலம் குரோம்பேட்டை சாலையில் பள்ளம் ஏற்பட்டு பின்பு சரி செய்யப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்த சாலை சீரமைக்கபடாமலே இருக்கிறது. மேலும் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் இந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது தொடர்பாக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.